முதல் திருமணத்தின் போது பிறந்த குழந்தையை அதன் தாயிடமே ஒப்படைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: முதல் திருமணத்தின் போது பிறந்த குழந்தையை அதன் தாயிடமே ஒப்படைக்குமாறு மாமியாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
நாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் சுபா. இவருக்கும் மேனன் பாபு என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு காவ்யஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேனன் பாபு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சுபா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். சில நாள்களுக்குப் பிறகு, அதாவது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுபா, சுசீந்திரன் என்பவரை மறு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய காவ்யஸ்ரீயை, மேனன் பாபுவின் தாய் காளியம்மாள் கடத்திச் சென்றுவிட்டார். தன் மகனுக்குப் பிறந்த குழந்தை தன்னுடன்தான் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
குழந்தை காவ்யாஸ்ரீ, கடத்தப்பட்டது குறித்து சுபா, போலீஸில் புகார் அளித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர், குழந்தையின் உண்மையான பாதுகாவலர் அவரது தாயே. எனவே குழந்தையை வளர்க்கும் முழு உரிமையும் தாயுக்கே உள்ளது. எனவே, காளியம்மாள் குழந்தை காவியஸ்ரீயை அவரது தாய் சுபாவிடம் உடனே ஒப்படைக்க உத்தரவிட்டனர். மேலும், குழந்தையை ஒப்படைப்பதற்கு தேவையான உதவியை செய்யுமாறு நாகப்பட்டிணம் போலீஸாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications