பூவரசம் பூ பூத்தாச்சு.. செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில் சேவை.. இன்று முதல் கூ கூ!
செங்கோட்டை-கொல்லம் இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Recommended Video

செங்கோட்டை: செங்கோட்டை-கொல்லம் இடையே இன்று முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு மீட்டர் கேஜ் பாதையில் தொடர் வண்டி இயக்கப்பட்டு வந்தது. இந்த பாதையை அகல பாதையாக மாற்ற கடந்த 2010-ஆம் ஆண்டு தொடர்வண்டி சேவை நிறுத்தப்பட்டு அகல பாதை பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் 8 ஆண்டு நடைபெற்று வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த வழித்தடத்தில் வாரம் இருமுறை தாம்பரம் - கொல்லம் விரைவு தொடர் வண்டி இயக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செங்கோட்டை - கொல்லம் இடையிலான பயணிகள் தொடர்வண்டி சேவை தொடங்கியது. முதல் நாளான இன்று செங்கோட்டையில் இருந்து சேவை தொடங்கியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் சேவை தொடங்கியது. இதனால் இரு மாநில எல்லையில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த ரயிலானது, செங்கோட்டையிலிருந்து காலை 11.25க்கு புறப்பட்டு மாலை 3.40க்கும் கொல்லம் வந்து சேரும் என்றும், கொல்லத்திலிருந்து காலை 10.30-க்கு புறப்படும் ரயில் பகல் 2.35க்கு செங்கோட்டைக்கு வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியதால் செங்கோட்டை வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ரயிலை இயக்கிய ஓட்டுனர்களுக்கும் மற்றும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
செங்கோட்டையில் இருந்து கோயமுத்தூருக்கும், திருப்பூருக்கும், பகல் நேரத்தில் தொடர் வண்டியை இயக்க வேண்டும். அதிகமான அதிவிரைவு தொடர்வண்டிகளை இந்த பகுதியில் இருந்து இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications