கிலோ ரூ. 600 விற்ற நெய் மீன், இப்போ ரூ. 200தான்... மக்களுக்கு ஜாலி.. மீனவர்களுக்கே கவலை
ராமேஸ்வரம்: அதிக ருசி கொண்ட மீன்களில் ஒன்றான நெய் மீன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட நெய் மீன், தற்போது ரூ.200க்கு விற்கப்படுவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகளில் செல்லும் மீனவர்கள் வலையில் விளை, கிளி, முரல், கிளாத்தி, திருக்கை, பாறை, சீலா மீன் உள்ளிட்ட மீன்கள் கிடைக்கும்.

இந்த மீன்களிலேயே அதிக ருசி கொண்டது சீலா மீன். அதிக முள் இல்லாமல் மெதுவாக இருக்கும் இந்த மீன், குழந்தைகளுக்கும் அதிகம் கொடுக்கப்படுகிறது. இந்த மீன், நெய் மீன் என்றும் குறிப்பிடப்படுகிறது.
அதிக ருசி கொண்ட மீன் என்பதால் எப்போதும் விலையும் அதிகமாகவே இருக்கும். கடந்த மாதம் கிலோ ரூ. 600 வரை விற்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பாம்பன் பகுதியில் சீலா மீன்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது கிலோ ரூ.200க்கு சீலா மீன்கள் விற்கப்படுகின்றன.
இந்த அதிரடி விலை வீழ்ச்சியால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தற்போது இந்த மீன்கள் நாகப்பட்டினம், கோடியக்கரை, தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பல ஊர் களிலும் அதிகம் கிடைக்கின்றன. எனவே தமிழகம் முழுவதும் இந்த மீன் கிடைப்பதால் வெளியூர்களுக்கு அனுப்பப்படாமல் பாம்பனில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications