வாழ்க்கையில் இனி ரயிலில் ஏறவே மாட்டோம்.. கத்தியுடன் திரிந்த மாணவர்கள் மன்னிப்பு கேட்டு கதறல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயிலில் கத்தியுடன் ஏறி மிரட்டிய கல்லூரி மாணவர்கள் தங்களை மன்னித்து விட்டுவிடும்படி கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் - சென்னை இடையேயான புறநகர் ரயில் வழித்தடத்தில் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்கள் பயணிக்கின்றனர். வழக்கமாக பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள் பஸ் டே கொண்டாடி இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.

The four students who were traveling in train with long knife crying to police for apology

இந்நிலையில் சென்னை - ஆவடி இடையே பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் ரவுடிகள் போல் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து பயணிகளை அச்சுறுத்தியபடி பயணம் செய்தனர். இந்தக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கத்தியுடன் திரிந்த 4 மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்த போலீசார் 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். அந்த 4 பேரும் இனி வாழ்க்கையில் ரயிலில் ஏறவே மாட்டோம் எங்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என கையெடுத்து கும்பிட்டு கதறும் காட்சி வெளியாகியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The four students who were traveling in train with long knife crying to police for apology.Yesterday four college students were traveling in train with knife.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற