கோடை முடிந்த பிறகும் கொளுத்தும் வெயில்
நெல்லை: நெல்லை மாவட்ட பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவ நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. வெயில், மழை,காற்று வழக்கத்தை விட அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. இந்த வெயிலால் கடந்த சீசனில் நிரம்பி வழிந்த குளங்கள் வறண்டன. மீண்டும் வறட்சி தலை தூக்கியது. பின் தென் மேற்கு பருவ மழையால் ஓரளவு தண்ணீர் கிடைத்தது. தற்போது காற்று சீசனும் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வெயில் கொளுத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.
காற்று சீசன் இன்னும் 20 நாளில் நிறைவு பெற உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வறண்ட வானிலை தொடரும். இது அக்டோபர் இரண்டாவது வாரம் வரை நீடிக்கும். அதன் பிறகு வடகிழக்கு பருவமழை பெய்தால் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்கலாம். இந்த வெப்ப தாக்கத்திற்கு புவி வெப்பமடைதலே காரணம் என கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications