"பெண் ஆட்டை" கடித்து குதறி.. மரத்தில் தொங்கவிட்டு போன பயங்கரம்.. மலையடிவாரத்தில் ஒரே பரபரப்பு
ஆடு ஒன்றை கடித்து மரத்தில் தொங்க விட்டு போயுள்ளது சிறுத்தை
தென்காசி: சிறுத்தை ஊருக்குள் புகுந்து ஆடு ஒன்றை அடித்து கொன்று, மரத்தில் தொங்க விட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சியில் மலையில் சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக வசித்து வருகின்றன.
இந்த மலையடிவாரத்தில் கிராமங்களுக்குள் மக்கள் வசித்து வருகின்றனர்.. ஆனால், வனவிலங்குகள் அடிக்கடி, கிராமத்திற்குள் புகுந்துவிடுவதுடன், கால்நடைகள், பயிர்களுக்கு சேதப்படுத்தி விடுகிறது..

வாழ்வாதாரம்
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், ஒருவித அச்ச உணர்வுடன் வாழ வேண்டிய நிலைமைக்கு ஆளாகி உள்ளனர்.. அந்த வகையில், கடையம் அருகே கடனாநதி அடிவார பகுதியில் பெத்தான் பிள்ளை என்ற குடியிருப்பு பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் பட்டு...

பட்டு விவசாயி
இவர் ஆடு மேய்த்து விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்றைய தினம் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வீடு திரும்பினார். அப்போதுதான், ஒரு பெண் ஆடு காணாமல் போனது தெரியவந்தது.. அதனால், பதறி போன பட்டு, அந்த ஆடுவை தேட ஆரம்பித்தார்.. எங்குமே கிடைக்கவில்லை..

காணாமல் போன ஆடு
இந்நிலையில், இன்று காலை மறுபடியும் ஆடு எங்கே இருக்கிறது என்று தேட ஆரம்பித்தார்.. அப்போதுதான், மலையடிவாரப் பகுதிகளில், ஒரு மரத்தில் ஆடு இறந்து தொங்கி கொண்டு கிடப்பதை கண்டார்.. அது தன்னுடைய காணாமல் போன பெண் ஆடு என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்... வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்..

மரத்தில் ஆடு
சிறுத்தை ஒன்று, ஆட்டை அடித்து மரத்தில் எடுத்து வைத்து கொண்டு, கடித்து தின்றுள்ளது.. மிச்ச ஆட்டையும் மரத்திலேயே தொங்க விட்டு போனது தெரியவந்தது.. அந்த சிறுத்தை பக்கத்தில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து வந்துள்ளது தெரியவந்தது.. எனவே, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஆய்வு செய்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications