காட்பாடியில் உடலில் ரத்த காயங்களுடன் தூக்கில் தொங்கிய வடமாநில இளைஞர்.. அடித்து கொலையா? என விசாரணை
காட்பாடியில் உடலில் ரத்த காயங்களுடன் தூக்கில் தொங்கினார்.
காட்பாடி: காட்பாடியில் வடமாநில இளைஞர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் தூக்கில் தொங்கி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ளது துரைநகர் பகுதி. இங்கு முள்புதரில் வடமாநில இளைஞர் தூக்கில் பிணமாக தொங்கியதை அங்குள்ள பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கிய இளைஞரின் சடலத்தை மீட்டனர். உயிரிழந்த இளைஞருக்கு சுமார் 30 வயதிருக்கும் என கூறப்படுகிறது. ஜீன்ஸ் பேண்ட் மட்டும் அணிந்திருந்த அந்த இளைஞரின் முகம், மார்பு இடுப்பு பகுதியில் ரத்த காயங்கள் இருப்பதால், அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அவரது ஜீன்ஸ் பாக்கெட்டில் கவுகாத்திக்கு ரெயில்வே முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பம் மற்றும் 3 தொலைபேசி எண்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். அந்த எண்களில் தொடர்பு கொண்டபோது, 3 பேருமே இந்தி மொழியில் பேசியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் சமீப காலமாக குழந்தை கடத்தல் காரணங்களுக்காக வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால், உயிரிழந்த இளைஞரும் குழந்தை கடத்தல் பீதியில் கொல்லப்பட்டிருப்பாரோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications