அடுத்து வரப்போற புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?
அடுத்து உருவாகவுள்ள புயலுக்கு இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட பெயர் வைக்கப்படவுள்ளது.
Recommended Video

சென்னை: அடுத்து உருவாகவுள்ள புயலுக்கு இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட பெயர் வைக்கப்படவுள்ளது.
உலகளவில் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் 1953ல், அட்லாண்டிக் கடற்பகுதியில் துவங்கியது. உலக வானிலை அமைப்பு மூலம் கடல்களின் அடிப்படையில், அவற்றை சார்ந்த நாடுகளை இணைத்து புயல்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
வட இந்திய பெருங்கடலின் பட்டியலில், இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், மாலத்தீவு, ஏமன், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளின் சார்பில், 2014ல், ஒவ்வொரு நாடும் தலா எட்டு வீதம் 64 பெயர்களை பதிவு செய்துள்ளன.

இதுவரை 49 பெயர்கள்
இதுவரை, 49 பெயர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியபெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு, ஆங்கில எழுத்துகளின், ஏ, பி, சி, அகர வரிசையில், முதலில், பங்களாதேஷ் என்ற வங்கதேசம் வழங்கிய பெயர் வைக்கப்படும்.

கடைசியாக ஓகி புயல்
பிறகு வரிசையே இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, கடைசியில், தாய்லாந்து நாடு வழங்கிய பெயர் வைக்கப்படும். கடைசியாக உருவான புயலுக்கு வங்கதேசம் அளித்த ஓகி பெயர் சூட்டப்பட்டது.

சின்னபின்னமாக்கியது..
இந்தப்புயல் கடலில் இருந்தபடியே தென் தமிழகம், தெற்கு கேரளா மற்றும் லட்சத்தீவுபகுதிகளை சின்னாபின்னமாக்கியது. ஓகி புயலால் கொட்டித்தீர்த்த மழையால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வெள்ளக்காடானது.

’சாகர்’ எனப் பெயர்
இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் அடுத்த புயலுக்கு இந்தியா அளித்த பெயர் சூட்டப்படவுள்ளது. அதாவது இந்தியா அளித்துள்ள 'சாகர்' என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.

கடல் என்று பொருள்
சாகர் கடல் என்று பொருள் ஆகும். இது 50வது புயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறினால் அதற்கு இந்த பெயர் சூட்டப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications