பரப்பன அக்ரஹார சிறை உள்பட சில இடங்கள் தவிர... மற்ற அத்தனை இடங்களிலும் ரெய்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தும் அதிகாரிகள் ரெய்டு நடத்தாத இடங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இன்று காலை முதலே ஜெயா டிவி அலுவலகம், நமது எம்ஜிஆர் அலுவலகம் பரபரப்பாகியுள்ளது. அங்கு வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாது சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடு, அலுவலகம் என 190 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

The places where IT officials not conducting raid

இந்நிலையில் ரெய்டு நடைபெறாத இடங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன. சசிகலாவின் கணவர் நடராசனின் பெசன்ட் நகர் வீட்டில் சோதனை நடத்தவில்லை. நடராசன் உடல்நலம் குன்றியுள்ளதால் அங்கு சோதனை நடத்தவில்லை என்று தெரிகிறது.

அதே போல சிறுதாவூர் பங்களாவிலும், நடராசனின் சகோதரர் ராமச்சந்திரனின் தஞ்சாவூர் வீட்டிலும், சென்னை எம்எம்டிஏ காலனியில் உள்ள திருமண மண்டபத்திலும் சோதனை நடத்தப்படவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT officials who are conducting raids in Sasikala's relatives and supporters house, not gone for raid in some places. What are they?

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற