திருப்பூரில் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக போலீஸ்காரர்கள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை!
போலீஸ்காரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பூர்: போலீஸ்காரர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருப்பூரில் ஆயுதப்படை போலீஸ்காரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தையை பார்க்க செல்லக்கூட விடுமுறை தராமல் அதிகாரிகள் டார்ச்சர் செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர் மோகன் 30. திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீசில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 5 மாதத்தில் குழந்தை உள்ளது. ஆனால் மனைவியும் குழந்தையும் பெற்றோருடன் இருக்க, மோகன் மட்டும் திருப்பூரில் அறை எடுத்து தங்கி வேலைபார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், வஞ்சிபாளையம் அருகே உள்ள ரயில்வே தண்டபாளத்தில் ஆண்பிணம் ஒன்று கிடப்பதை கண்ட ரயில்வே போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இறந்தவர் குறித்த விசாரணை நடத்தியதில், அவர் காவலர் மோகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, உடலை மீட்ட போலீசார், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீண்ட நாட்களாக மோகனுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்றும், பிறந்த குழந்தையை சென்று பார்க்கக்கூடிய முடியாமல் போய்விட்டதால் கடும் மன உளைச்சலில் மோகன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
எப்போது விடுமுறை கேட்டாலும் உயர் அதிகாரிகள் தர மறுத்துள்ளதுடன், வேறு பணிகளையும் கொடுத்து டார்ச்சர் செய்துள்ளதால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அனுப்பர்பாளையம் போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் தற்கொலை குறித்த உண்மை நிலவரங்களை அறிய தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications