ஜெயந்திக்கு ஆப்பு வைத்தது கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கை?
சென்னை: கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் அறிக்கைகளை கேரளாவில்அமல்படுத்த பரிந்துரை செய்ததுதான் தன்னை காங்கிரஸிலிருந்து விலக்கியதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார் ஜெயந்தி நடராஜன்.
இதுகுறித்தி பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்த கேரள தமிழர் கூட்ட மைப்பின் அமைப்பாளர் அன்வர் பாலசிங்கம், "சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப் பதற்காக கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் 123 கிராமங்களில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரை களை அமல்படுத்த முனைந்தது மத்திய அரசு.

அந்த கிராமங்களில் புதிய கட்டுமானங்களை எழுப்ப தடை விதித்தும், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக மேலும் பல கட்டுப்பாடுகளையும் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந் துரை செய்திருந்தது. இந்தப் பரிந்துரைகள் கேரளத்தில் மட்டு மல்லாது தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் அமலுக்கு வந்தது.
மற்ற மாநிலங்களில் இதற்கு எதிராக எந்தப் போராட்டமும் வெடிக்கவில்லை. கேரளத்தில் மட்டும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.
கேரள சம்ரக்ஷன சமிதி என்ற அமைப்பின் தலைவர் ஃபாதர் செபாஸ்டின் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். 123 கிராமங்களிலும் ஏராளமான சிறுபான்மையினர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தப் பட்டால் இந்தப் பள்ளிகளுக்கு பாதிப்பு வரும். இதனால் சம்ரக்ஷன சமிதி எதிர்ப்பு தெரிவித்து இடுக்கி மாவட்டத்தில் மூன்று நாட்களும் மாநிலம் முழுக்க ஒரு நாளும் முழு அடைப்பு நடத்தியது.
ஆனால், இவர்கள் யாரைப் பற்றியும் ஜெயந்தி கவலைப்பட வில்லை. சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து உண்டாக்கும் எந்த கோப்பிலும் நான் கையெழுத்திட மாட்டேன் என உறுதியாக நின்றார் அப்போது வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன்.
இதையடுத்து, சக அமைச்சர் வீரப்ப மொய்லி மூலமாக அப்போது ஜெயந்திக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதற்கும் அவர் அசரவில்லை. அதன் பிறகுதான் ஜெயந்தியை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தார்கள். அவர் ராஜினாமா செய்த மறுநாளே அவரது துறையை கவனித்து வந்த ஜெய்ராம் ரமேஷை கையெழுத்துப் போடவைத்து கேரளத்தில் மட்டும் கஸ்தூரி ரங்கன் கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த விதிவிலக்கு அளிப்பதாக அறிவித்தார்கள்.
இப்படி விதிவிலக்கு அளிக்கப்படாமல் இருந்திருந்தால் கேரளத்தின் விளிம்பில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் இப்போது நியூட்ரினோ ஆய்வு மையம் வந்திருக்காது.
இதன் பின்னணியிலும் உள்ளார்ந்த சதி இருக்கிறது. நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கேரளத்தில் எத்தனையோ இடங்கள் இருக்கும்போது தமிழகத்தை தேர்வு செய்திருக்கிறார்கள்.
நியூட்ரினோ ஆய்வு மையத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆதரிக்கிறது. ஆனால், கேரள அறிவியல் இயக்கம் எதிர்க்கிறது. நியூட்ரினோவுக்காக வெடிவைக்கப்பட்டால் கேரளத்தில் உள்ள முல்லைப் பெரியாறு உள்ளிட்ட 22 அணைகளுக்கு பாதிப்பு வரலாம் என்பது கேரள அறிவியல் இயக்கத்தின் அச்சம்.
அப்படி எதாவது விபரீதம் நடந்தால் அதையே காரணம் காட்டி முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கோஷத்தை மீண்டும் கையிலெடுப்பார்கள்.
இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்துத்தான் தனது நிலையில் உறுதியாக இருந்தார் ஜெயந்தி. ஆனால், அவரது அமைச்சர் பதவியை பறிகொடுக்கச் செய்து நினைத்ததை சாதித்து விட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications