Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருப்ப மனுக்கள்.. முந்திய அதிமுக, பாமக.. மத்தவங்க என்ன பண்றாங்க??

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருப்பமனுக்கள் விற்பனை... வேட்பாளர் தேர்வு என களைகட்டத்தொடங்கிவிட்டது தேர்தல் களம். யாருடன் யார் கூட்டணி, யாருக்கு எத்தனை தொகுதிகள் என்று பேரங்கள் எதுவும் முடிவாகாத நிலையில் ஆளுக்கு முதலாய் விருப்பமனு விற்பனையை தொடங்கிவிட்டது அதிமுக. நாளை முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடுபவர்களை விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஜெயலலிதா. வழக்கம் போல சட்டசபை தேர்தலுக்கு அதிமுக முந்திக்கொண்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளுக்கு முதலாய் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு மண்டல மாநாடு நடத்திய பாமகவும் தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து விருப்பமனுக்களை விற்பனை செய்ய உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியோ தமிழக கோஷ்டித்தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தப் போகிறார். மக்கள் நலக்கூட்டணியோ விஜயகாந்த் வரவை எதிர்நோக்கியுள்ளது. திமுகவும் விஜயகாந்த் என்ன சொல்வார் என்று காத்துக்கொண்டிருக்க, பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து விட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் யாருடன் கூட்டணி அமைப்பது என்ன முடிவெடுக்க முடியாமல் யோசித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்திக்கொண்ட அதிமுக

முந்திக்கொண்ட அதிமுக

எந்த தேர்தல் என்றாலும் வழக்கமாக முந்திக்கொள்வது அதிமுகதான். சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 6ம்தேதியே அதிமுகவினர் தொடங்கிவிட்டனர். மகத்தான வெற்றிபெற தேர்தல் பணியில் இன்றே ஈடுபடுங்கள் என்றும், 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று புதிய வரலாறு படைக்க வேண்டும் என்று பொதுக்குழு கூட்டத்திலும், எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலும் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

பிரச்சார வாகனங்கள்

பிரச்சார வாகனங்கள்

வீடு வீடாக சென்று சாதனைகள் சொல்லும் அதே நேரத்தில் மக்கள் ஒளி-ஒளி காட்சி மூலம் ஆட்சியின் சாதனைகளை, திட்டங்களை தெரிந்து கொள்ள வசதியாக பிரச்சார வாகனங்களையும் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

ஜெயலலிதா அறிவிப்பு

ஜெயலலிதா அறிவிப்பு

கடந்த லோக்சபா தேர்தலின் போது, அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக, தனித்து போட்டி என, அ.தி.மு.க., அறிவித்தது. மற்ற கட்சிகள் கூட்டணியை முடிவு செய்யும் முன், வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியீடு முடித்து, முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கினார். அதே பாணியில், சட்டசபை தேர்தலையும் சந்திக்க அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகம்

எனவேதான் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பும்,கட்சியினரிடம் இருந்து, ஜனவரி 20 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், விருப்ப மனுக்கள் பெறப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலித அறிவித்துள்ளார்.

234 தொகுதிகளுக்கும் மனு

234 தொகுதிகளுக்கும் மனு

விருப்ப மனு கட்டணமாக, தமிழகத்திற்கு, 11 ஆயிரம் ரூபாய்; புதுச்சேரிக்கு 5,000 ரூபாய்; கேரளாவுக்கு, 2,000 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் தினமும் காலை, 10.30 மணி முதல் மாலை, 5.00 மணி வரை, கட்டணத் தொகையை செலுத்தி, விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருக்கிறார். இதனை அடுத்து அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்க வசதியாக சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 234 தொகுதிகளுக்கும் மனுக்கள் பெறப்பட உள்ளன.

அதிமுக கூட்டணி யாருடன்?

அதிமுக கூட்டணி யாருடன்?

ஜெயலலிதா திரைமறைவில் சில வேலைகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநாடு திருச்சியில் நடந்த போது மூத்த அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்துகொண்டார். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை சமீபத்தில் கோட்டையில் வைத்து முதல்வர் சந்தித்து பேசியதும் கூட்டணிக்கான அச்சாரம்தான். கொங்கு ஈஸ்வரன் கட்சியையும் அ.தி.மு.க-வுக்கு இழுக்கும் வேலைகள் நடந்து வருகிறதாம். தாமகவும் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நேர்காணல்கள் எப்போது?

நேர்காணல்கள் எப்போது?

தேர்தலுக்கான விருப்பமனுக்கள் பிப்ரவரி வரை பெறப்பட்டு மார்ச் மாதத்திற்குள் நேர்காணல்களை நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளார் ஜெயலலிதா. இப்போது எம்.எல்.ஏக்களாக உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காலியாகிவிடுவார்கள் என்றும் அமைச்சர்களில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்தி​லிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், வளர்மதி, கோகுல இந்திரா, தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், மோகன், ரமணா, சின்னைய்யா ஆகியோரது தலைகள் மட்டுமே தப்ப வாய்ப்புள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தைலாபுரம்

தைலாபுரம்

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் ஜனவரி 27ம்தேதி முதல் பிப்ரவரி 5ம்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். மனுவுடன் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். மனுக்கள் பெறப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து, இரு மாநிலங்களிலும் போட்டியிட விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார் ராமதாஸ்.

கூட்டணிக்கு யாரும் வரலையே

கூட்டணிக்கு யாரும் வரலையே

முதல்வர் வேட்பாளர் என்று அன்புமணியை அறிவித்தும் கண்ணுக்கு எட்டுண தூரம் வரைக்கும் கூட்டணிக்கு யாரையும் காணோமே என்று என்று ஜி.கே.மணியும், ராமதாசும் யோசித்துக்கொண்டிருக்க, பாமக எப்படியும் கூட்டணிக்கு வந்து விடும் என்று நம்பிக்கையோடு இருக்கிறது பாஜக.

திமுக தேர்தல் அறிக்கை குழு

திமுக தேர்தல் அறிக்கை குழு

கடந்த ஆண்டு ஜூலை மாதமே சட்டசபை தேர்தல் அறிக்கையை தயாரிக்க டி.ஆர். பாலு தலைமையில் 9 பேர் கொண்ட குழு அறிவித்தது திமுக. செப்டம்பர் முதல் நமக்கு நாமே பயணம் செய்தார் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின்.

யாரையும் கூப்பிட மாட்டோம்

யாரையும் கூப்பிட மாட்டோம்

திமுக தலைவர் கருணாநிதியோ, கூட்டணிக்கு வரச்சொல்லி யாரையும் கூப்பிடமாட்டோம்.. அதே நேரத்தில் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று சூசகமாக தெரிவித்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை விஜயகாந்தை வருந்தி கூப்பிட்ட கருணாநிதி, இன்று வந்தால் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மாறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ தேர்தல் களத்தில் ஓட அதிமுக முந்திக்கொண்டு தயாராகிவிட்டது எதிர்கட்சிகளை சற்றே யோசிக்க வைத்துவிட்டது என்னவோ உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+