கருணாநிதியின் மஞ்சள் துண்டு, பவளமோதிரம், சிவப்பு கை கடிகாரம்... ரகசியம் தெரியுமா?
சென்னை: என் தலைவன் தும்மினாலும் அது தலைப்பு செய்தி என்பார்கள். அதுபோலத்தான் திமுக தலைவர் கருணாநிதியிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தனி அர்த்தம் இருக்கும் அதேபோலவே அவர் அணியும் மஞ்சள் துண்டு, கையில் அணியும் கடிகாரம், மோதிரம் கூட இன்றைக்கு பேசப்படும் பொருளாக இருக்கிறது.
திராவிட இயக்கத்தில் இணைந்து பகுத்தறிவுவாதியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு பிடித்த நிறமே கருப்புதான். வெள்ளை நிற ஆடைகள் அணிந்தாலும் கறுப்பு துண்டு கழுத்தில் அணிந்திருப்பார். கறுப்பு துண்டு மஞ்சளானது, கையில் பவள மோதிரம், சிவப்பு நிற பட்டை கொண்ட கடிகாரம் என கருணாநிதியின் கலர் மாறியிருப்பது என்னவோ அரசியல் விமர்சகர்களின் வாய்க்கு அவலாகத்தான் இருக்கிறது.

மஞ்சள் துண்டுக்கு மாறியது ஏன்
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சள் நிற துண்டு அணிந்து வருகிறார். ஜோதிடர் அறிவுரைப்படி, குருவுக்கு உகந்தது என்பதால், அவர் மஞ்சள் துண்டு அணிவதாக, தகவல் பரவியது. இது தொடர்பாக, பல சர்ச்சைகள் எழுந்தபோதும், கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதை நிறுத்தவில்லை.
எந்த நம்பிக்கைக்காகவும் மஞ்சள் துண்டை அணியவில்லை; ஒரு அடையாளத்துக்காகத் தான் அணிகிறேன்' என, அவரே பின்னர் விளக்கம் அளித்தார். அதையும் மக்கள் நம்பினார்கள்.

கலர் மாறிய கை கடிகாரம்
கருணாநிதி தனது கையில் எப்போதும் கட்டியிருக்கும் கடிகாரத்தில் கறுப்பு நிற பட்டைதான் இருக்கும். சமீப காலமாக சிவப்பு நிற பட்டையுடன் கூட கடிகாரத்தை அணியத் தொடங்கியுள்ளார். இதைப்பார்த்த சிலர், வேலுாரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார் என்று கிளப்பி விட்டனர்.

மீண்டும் முதல்வராக பூஜை
கருணாநிதி இந்த கடிகாரத்தை, சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார். எதிரிகள் அழியவும், அவர் மீண்டும் முதல்வராகவும், நீண்ட ஆயுளுக்காகவும், சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்தை அணிந்திருப்பதாகவும் கூறப்பட்டது.
|
ராமதாசுக்கு என்ன பதில்
இந்த விவகாரத்திற்கு இடையே டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது தோச, பரிகாரங்களுக்கு விளம்பர தூதராக நியமிக்கலாமே என்றும் கிண்டலாக கேட்டிருந்தார்.
|
மந்திரித்த கயிறா?
இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் கருணாநிதி மீண்டும் கேள்வி பதில் அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதோடு டுவிட்டரிலும் கருத்தை பதிவிட்டுள்ளார். அதற்கும் ஏராளமானோர் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கலர் மாறியது ஏனோ?
அரசியல்வாதியும் அவர்கள் கட்சி கொடியில் உள்ள கலரில் துண்டு அணிவது வழக்கம். ஒருவர் அணிந்துள்ள துண்டை வைத்தே அவர் எந்த கட்சியைச் சேரந்தவர் என்று எளிதாக அறிந்துக் கொள்ளலாம். 1996ம் ஆண்டில் இருந்து கருணாநிதி மஞ்சள் துண்டை மட்டுமே அணிந்து வருகிறார். எத்தனையோ விமர்சனங்கள் வந்தும் துண்டு கலர் மாறவே இல்லை.

குரு பலத்திற்காகவாம்
கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்படுவதால், கனமான மஞ்சள் துண்டு அணிந்தால் கழுத்து பகுதியில் வெப்பம் ஏற்படும். வலியை அது கட்டுப்படுத்தும் என, மருத்துவர்கள் ஆலோசனைப்படி துண்டு மாற்றம் நடந்தது என, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.
கருணாநிதி ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்ததால், குருபலம் பெற அவர் மஞ்சள் துண்டு அணிந்தார் என, ஆன்மிகவாதிகள் கூறி வந்தனர்.

தஞ்சையில் பட்டு
தஞ்சாவூரில் பெரிய கோவிலில் நடைபெற்ற 1000மாவது ஆண்டு விழாவின் போது பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் கருணாநிதி. அப்போதும் அது சர்ச்சையை கிளப்பியது.

சிவப்பு செவ்வாய்க்கு
கருணாநிதி ஜாதகப்படி, சுக்கிர திசையில், செவ்வாய் புத்தியில், ராகு, ஐந்தாம் இடத்தில் இருந்து, நான்காம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார். எனவே, இடது கையில் சிவப்பு நிற பட்டை கைக்கடிகாரத்தை கட்டியுள்ளார். இதன் மூலம், அரசியலில் அவர் பின்னோக்கி தள்ளப்படுவது தடுக்கப்படும். அவரை முன்னிலைப்படுத்தி பணிகள் நடைபெறும் என்றும் ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

கறுப்பு சட்டை வெள்ளை துண்டு
அதிமுக ஆட்சியின் அராஜகத்தை எதிர்க்க கறுப்புச் சட்டையும், வெள்ளை துண்டும் அணிந்தார். அதற்கும் காரணம் கூறினர். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னரும், கனிமொழி கைது செய்யப்பட்ட பின், டெல்லி பயணத்தின் போதும் கருணாநிதி வெள்ளைத் துண்டு அணிந்திருந்தார். மன அமைதிக்காக வெள்ளை துண்டு அணிந்தார் என்றும் கூறி வந்தனர்.

பவள மோதிரம் ஏன்?
கருணாநிதியைப் பற்றி அவர் அணியும் பொருட்களை விமர்சிப்பதும், அதற்கு கருணாநிதி கேள்வி பதில் வடிவில் விளக்க அறிக்கை கொடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அதே நேரத்தில் அவரது கை விரலில் இடம் பெற்றுள்ள ராசிக்கல் மோதிரமான பவள மோதிரத்திற்கு என்ன காரணம் சொல்லப் போகிறாரோ கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications