அம்மா சிலையேதான்.. என்னா தத்ரூபம்.. என்னா தத்ரூபம்.. அடித்து சொல்லும் ராஜேந்திர பாலாஜி!
ஜெயலலிதா சிலை தத்ரூபமாக உள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலை தத்ரூபமாக உள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேரனுக்கு மொட்டையடித்துக் காது குத்தும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் அணியில் சேர்ந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சி பலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

கருத்து வேறுபாடு இல்லை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்ற அவர் முதல்வரும் துணை முதல்வரும் இணைந்து செயல்படுகின்றனர் என்றார். அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

சிலை தத்ரூபமாக உள்ளது
அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவின் சிலை தத்ரூபமாக உள்ளது என அடித்துக் கூறினார்.

உண்மையில் கையசைப்பதுபோல்
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எப்படி எங்களை பார்த்து கை அசைப்பாரோ அதே போல் உள்ளது என்றும் சிலையில் எந்த குளறுபடியும் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தினகரன் சிலையை பார்க்கட்டும்
சிலை கருத்து தெரிவிக்கும் தினகரன், சிலையை பார்த்து விட்டு கருத்தை கூறட்டும் என்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும், தினகரன் பக்கம் செல்ல மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு செங்கல்லை உருவமுடியாது
அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் பலத்தால், ஆலமரம் போல, அஸ்திவாரம் போட்டு, ஸ்டிராங்காக இருப்பதாகவும் இதிலிருந்து ஒரு செங்கல்லை கூட, யாரும்
உருவ முடியாது இருந்தது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications