சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து பாதிப்பு
சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை: சென்னை, தேனாம்பேட்டை எஸ்ஐடிஇ கல்லூரி சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சிமென்ட் கலவை மூலம் நிரப்பப்பட்டு அந்த பள்ளம் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை எஸ்ஐஇடி சிக்னல் அருகே மெட்ரோல் ரயில் சுரங்கப்பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென சாலையின் நடுவில் சுமார் 4 அடி அகலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட பள்ளத்தை அறியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் தங்களது பைக் முன் சக்கரம் சிக்கி கொண்டு அதை மீட்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அண்ணா மேம்பாலம் வரை அணிவகுத்து நின்றது.

இதையொட்டி கல்லூரி, பள்ளி, வேலைக்கு செல்வோர் கடும் சிரமம் அடைந்தனர். தகவலறிந்த போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்து, வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மெட்ரோ ரயில் பணியாளர்கள் சிமென்ட் கலவை மூலம் அந்த பள்ளத்தை நிரப்பி மூடினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications