சுட்டெரிக்கும் வெயில்... ஆபத்திலிருந்து காத்து கொள்வதற்கான அவசர கால வழிமுறைகள்!
தற்போது நாட்டின் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதிலிருந்து உயிரை காத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
சென்னை: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வெயில் 100 பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது. மேலும் அனல்காற்றும் வீசி வருவதால் , உயிரிழப்புகள் ஏற்படு்ம அபாயங்கள் உள்ளன.
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது.
அனல் காற்றால் உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால் தேசிய மற்றும் மாநில அளவிலான வானிலை ஆய்வு மையங்கள் மக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கி வருகின்றன.

வெளியே போக முடியாமல் இருக்க முடியாது
பிள்ளைகளை அழைத்து வருதல், பள்ளி, கல்லூரி, பணி செல்லுதல் உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் நம்மால் வெளியே போகாமல் இருக்க முடியாது. என்னதான் வெயில் வாட்டி வதைத்தாலும் அன்றாட பணிகளை விட்டுக் கொடுக்க முடியாது. எனினும் வந்த பின் அவதிப்படுவதைக் காட்டிலும், வரும் முன்காப்பதே நல்லது.

என்னென்ன நடக்கும்
சுட்டெரிக்கும் வெயிலால் நமது உடலின் ஆற்றலானது உறிஞ்சப்பட்டு மயக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் உயிருக்கு ஆபத்து நேரலாம். மேலும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருக்கும். தாங்க முடியாத தலைவலி, நா வறட்சி, நீர் சத்து குறைபாடு, மயக்கம், சுயநினைவின்மை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். இதை நாம் நேரத்துடன் கவனித்து உரியதை செய்தால் உயிரிழப்பிலிருந்து காத்து கொள்ளலாம்.

வழிமுறைகள்
வெயிலில் செல்லும் போது மேற்கொண்ட எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் நிழலான இடத்துக்கு செல்ல வேண்டும். வேறு யாராவது மயங்கினாலும் அவர்களை சூரிய ஒளி நேரடியாகபடாத இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். உடலை ஈரத்துணியால் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் உடல் உஷ்ணம் அதிகரிப்பதைத் தடுக்கும். உப்பிட்ட மோர், இளநீர், குளுகோஸ் உள்ளிட்ட திரவங்களை அருந்தினால் சற்று நிவாரணமாக இருக்கும். அதன்பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எனவே வெயிலில் செல்பவர்கள் மேற்கண்ட ஏதாவது ஒன்றை கையில் கொண்டு செல்லுங்கள். நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

மயக்கத்தை தடுக்க
அவசியமான தேவையை தவிர, வெயில் நேரங்களில் வீட்டை விட்டு செல்வதை தவிர்த்து விடுவது நல்லது என்று வானிலை ஆய்வு மையங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும் வெளியே செல்பவர்கள் தொப்பி, குடை, தலையை கட்ட துணி ஆகியவற்றை உடன் கொண்டு செல்ல வேண்டும். எப்போதும் மெல்லிய பருத்தி ஆடைகளையே அணியுங்கள். விரைந்து மயக்கம் அடைவோரை அனல் காற்று பாதிக்கும். எனவே போதை ஏற்றும் பானங்களை தவிர்க்கவும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications