ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் எம்.சி. சம்பத் உறுதி
சென்னை: தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கிராம மக்கள் கடந்த ஏப்ரல் 12ம் முதல் இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். தினமும் பல்வேறு நூதன போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இன்று 91வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கிராமமக்கள், விவசாயிகள் திரளாக கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இத்திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயம் பாதிக்கும். குடிநீர் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்கள் இடையே நிலவுகிறது.
இதனிடையே நேற்று நெடுவாசல் கிராம மக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்தார். அப்போது நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மனு அளித்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது. விவசாயம் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கடிதம் மூலம் தமிழக அரசுக்கு உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காது எனவும் நெடுவாசல் போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும் எனவும் அமைச்சர் எம்.சி.சம்பத் கேட்டுக்கொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications