For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடியில் 16 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நாட்டுப்படகு மீனவர்கள்

16 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : தூத்துக்குடியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நாட்டுப்படகு மீனவர்கள் 16 நாட்களுக்குப் பிறகு இன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலையை உண்டாக்கிய இந்த சம்பவத்தினை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக்கோரியும் தூத்துக்குடி மீனவர்கள் கடந்த 16 நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

The Thoothukudi fishermen go to the sea today

ஆனால் சில தினங்களுக்கு முன்பே தூத்துக்குடியில் நிலைமை சீராகி வர தொடங்கிவிட்டது. மாவட்டத்தில் தற்போது அமைதி திரும்பியுள்ளதை தொடர்ந்து தங்களது போராட்டத்தை மீனவர்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து, தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் மீண்டும் கடலுக்கு சென்றுள்ளனர்.

English summary
The fishermen were struck by the guns and the closure of the sterile plant. But in the last few days, the situation has improved. This has left the 16 days of struggle to go to sea to fishing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X