”பஞ்சர் ஒட்டும் சொலுஷன்” இளைஞர்களை சீரழிக்கும் புதிய போதை அரக்கன்…
சென்னை: டயர்களுக்கு பஞ்சர் ஒட்டப் பயன்படும் சொலுஷன் மூலம் போதையேற்றும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
இதனால் சிறுவர்களும்,இளைஞர்களும் பெருமளவில் சீரழிந்து வருகின்றனர்.
இப்பழக்கத்தின் மூலம் உள் உறுப்புகளான கல்லீரல்,சுவாசக்குழாய் பாதிக்கப்படுதல் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

தடையை மீறி விற்பனை:
அரசாங்கம் பான் மசாலா,குட்கா போன்ற போதைபொருள்களுக்கு தடை விதித்தும்,அவற்றை கடைகளில் விற்க கூடாது என்றும் சட்டம் இயற்றியுள்ளது.ஆனாலும் பல கடைகளில் அவற்றின் மறைமுக விற்பனை நடந்து வருகின்றது.

புதிய தலைமுறையின் புதிய போதை:
இந்நிலையில் போதைப்பழக்கத்தில் இருந்து மீள முடியாத இளைஞர்கள் தற்போது பஞ்சர் ஒட்டும் சொலுஷனை போதைப் பொருளாக பயன்படுத்த தொடங்கி இருப்பது மக்களுக்கிடையே கவலையை உண்டாக்கியுள்ளது.

வாழ்க்கையை பஞ்சர் ஆக்கும் சொலுஷன்:
பஞ்சர் ஒட்டப் பயன்படுத்தப்படும் சொலுஷனை வாங்கி, அதனை காலி தண்ணீர் பாக்கெட்டில் கலந்து முகர்ந்து பார்ப்பதன் மூலம் போதையேற்றிக் கொள்கின்றனர்.இதனால் பலமணி நேரம் போதை நீடிக்கிறது.இந்த பழக்கத்தினால் உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயத்தைப்பற்றி அவர்கள் அறிவதில்லை.

பரவும் போதை:
விழுப்புரம் மற்றும் திண்டிவனம் பகுதியில் இந்த போதைப்பழக்கம் பரவத்தொடங்கியுள்ளது.இந்த சொலுஷனுக்கு அரசாங்கம் தடை விதித்தால் ஒழிய இளைஞர்களைக் இக்கொடிய பழக்கத்தில் இருந்து காப்பற்ற முடியாது.

வாழ்க்கையா?வாய்க்கரிசியா?:
வாழ்க்கைக்கு விளக்கேற்றும் கண்டுபிடிப்புகளை தர வேண்டிய இளைஞர்கள்,தலைமாட்டில் விளக்கேற்றும் இத்தகைய கண்டுபிடிப்புகளால் அழிந்து போகத்தொடங்கி இருப்பது வருத்ததுக்கு உரிய சமூக பிரச்சினையாகும்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications