டாஸ்மாக்கை உடைத்து "புல் பாட்டில்"களை மட்டும் திருடிய நூதன ‘குடி’மகன்கள்!
கோவை: கோவை அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இத்தேர்தலை அமைதியாக நடத்த கடந்த சனிக்கிழமை முதலே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள் சிலர், நேற்று இரவு கோவை அருகே சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த மதுபாட்டில்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
அதிலும் வித்தியாசமாக குவார்ட்டர் பாட்டில்களை விட்டு விட்டு அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் மதுபானப் பாட்டில்களை மட்டும் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
இன்று காலை டாஸ்மாக் கடையின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சிங்காநல்லூர் போலீசார், கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கடையில் உள்ள மொத்த இருப்பு 11லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் எனவும் திருடுபோன மதுபானங்ளின் மதிப்பு தெரியவில்லை எனவும் ஊழியர்கள் போலீசாரிடம் கூறியதாகத் தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications