சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.... தேனியில் முன்கூட்டியே ஒரு வழிப்பாதை அமல்
தேனி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து தேனி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக டிசம்பர் 25-க்கு பின்னரே ஒரு வழிப்பாதைத் திட்டம் அமல்படுத்தப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக கம்பம், கூடலூர், லோயர் கேம்ப் பகுதிகளில் சபரிமலைக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.மேலும், மண்டல பூஜை,மகரஜோதி நடைபெறும் நாட்களில் வாகன நெரிசல் இன்னும் அதிகரிக்கும். இதையடுத்து மாவட்ட காவல்துறை சார்பில் ஒருவழிப்பதைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தேனி மாவட்டத்திலிருந்து சபரி மலைக்குச் செல்லும் வாகனங்கள் கம்பத்திலிருந்து, கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்குச் செல்ல வேண்டும். திரும்பி வரும்போது குமுளி, லோயர் கேம்ப் வழியாக தேனிக்கு வரவேண்டும். சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு தேனி அருகே பழனிச் செட்டி பட்டியில் உள்ள வட்டார போக்குவரத்துக்கழக சொதனைச் சாவடியில் தற்காலிக அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது, என கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications