எச்ஐவி' இல்லா சான்றிதழ் தந்தால்தான் திருமணம்..: உயர்நீதிமன்றம் பாராட்டிய தேனி கிராமம்

தேனி மாவட்டத்தில் உள்ளது கருங்கட்டான்குளம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 1542 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு கடந்த 2007ம் ஆண்டு முதல் திருமணத்திற்கு முன்னர் கட்டாய மருத்துவச் சான்றிதழ் வழங்கும் முறை அமல் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டுவாக்கில், லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் அதிகம் வாழும் இந்தக் கிராமத்தில் அதிக குழந்தைகள் எச்.ஐ.வி. பாதிப்போடு பிறந்துள்ளனர். மேலும், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு அதிக ஆண்கள் இளவயதிலேயே மரணத்தைத் தழுவியதால் அதிகளவிலான பெண்கள் விதவைகளாக ஆகியுள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் கட்டாய மருத்துவச் சான்றிதழ் திட்டத்தை அவ்வூர்த் தலைவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
இதன்படி, இங்குள்ள மறவர் மக்கள் மன்றத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் தங்களுக்கு எச்ஐவி இல்லை என திருமணத்துக்கு முன் சங்க நிர்வாகிகளிடம் சான்றிதழ் வழங்க வேண்டும். திருமணத்துக்கு பதிவு செய்யும்போது எச்ஐவி பரிசோத னைக்காக சங்கம் சார்பில் மணமகன், மணமகள் பெயர்கள் எழுதப்பட்ட விண்ணப்பம் தரப்படும். அந்த விண்ணப்பத்தை அரசு மருத்துவமனையில் வழங்கினால், இருவருக்கும் எச்ஐவி பரி சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். அதை சங்க நிர்வாகிகளிடம் அளிக்க வேண்டும். சான்றிதழில் எச்ஐவி இல்லை என குறிப்பிட்டிருந்தால் மட்டுமே திருமணம் நடைபெறுமாம்.
உடல்நலக் கோளாறுகளால் திருமணங்கள் தோல்வியில் முடிவதைத் தடுக்கும் வகையில் திருமணத்திற்கு முன் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தும் திட்டம் தொடர்பான விசாரணை மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வருகிறது.
இந்த விசாரணையின் போது வழக்கறிஞர் ஒருவர் கருங்கட்டான்குளம் கிராம மக்களின் வழக்கம் பற்றி கூறினார். அதைக் கேட்ட நீதிபதி அக்கிராமத்தின் செயலைப் பாராட்டினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications