18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தின் பின்னணியில் மத்திய அரசு இல்லை-தமிழிசை திட்டவட்டம்
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் மத்திய அரசு இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் மத்திய அரசு இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் இன்று அதிரடியாக தகுதிநீக்கம் செய்தார். இதற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசோ, ஆளுநரோ காரணம் இல்லை என அவர் கூறினார்.
உட்கட்சிப் பிரச்சனை மற்றும் குழப்பமான அரசியல் சூழ்நிலையிலேயே சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். இதற்கு எப்படி மத்திய அரசும் ஆளுநரும் பொறுப்பாக முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநரையும் மத்திய அரசையும் குறை சொல்வது பிரச்சனையை திசை திருப்பும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது சபாநாயகர் தீவிர ஆலோசனை நடத்தியே முடிவு எடுத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications