ஒதுக்கி வச்சது வச்சதுதான்.. தினகரனை கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்கக் கூடாது: ஜெயக்குமார் அதிரடி
டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டது ஒதுக்கப்பட்டதுதான் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் மற்றும் அவர் சார்ந்தவர்கள் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டது ஒதுக்கப்பட்டதுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக நிர்வாகிகள் யாரும் டிடிவி தினகரனை சந்திக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
திஹார் சிறையில் இருந்து வெளியே வந்த கையோடு கட்சிப் பணியை தொடரப்போவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். ஏற்கனவே கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டவர், ஒதுங்கி விட்டதாக அறிவித்தவர் மீண்டும் கட்சிப்பணிகளை தொடரப் போவதாக தெரிவித்தது அதிமுக அம்மா அணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை வந்த டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க சென்றார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

ஒதுக்கியதில் மாற்றமில்லை
இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கியதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

தினகரன் ஒதுங்க வேண்டும்
தினகரனை நம்பி கட்சி இல்லை என்றும் அவர் கூறினார். தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

யாரும் சந்திக்க மாட்டார்கள்
மேலும் டிடிவி தினகரனை கட்சியில் உள்ள யாரும் சந்திக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். யாருடைய பின்னணியும் இன்றி ஜெயலலிதா வழியில் கட்சியை நடத்துவதாகவும் அவர் கூறினார்.

எந்த தொடர்பும் இல்லை
தினகரன் சார்ந்தவர்களும் ஒதுக்கி வைத்து முழுமையான நல்லாட்சி நடைபெறுவதாகவும் ஜெயக்குமார் கூறினார். தினகரனுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications