எனக்கும் சீமானுக்கும் வித்தியாசம் இல்லை.. போர்க்களத்தில் நிற்கும் தளபதியாக பார்க்கிறேன் - அண்ணாமலை
செங்கல்பட்டு: எனக்கும் சீமானுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. அவரை ஒரு கட்சியின் தலைவர் என்று கூறுவதை விட போர்க்களத்தில் நிற்கக்கூடிய தளபதியாகத்தான் நான் பார்க்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு எஸ்.ஆர்.எம். பல்கலையில் தமிழ்ப் பேராயம் சார்பில் சொல் தமிழா சொல் என்ற நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: சீமானை ஒரு அரசியல் கட்சியின் தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று கூறுவதைவிட போர்க்களத்தில் நிற்கக்கூடிய தளபதியாகத்தான் நான் என்றுமே சீமானைப் பார்க்கிறேன். காரணம் அவருடைய கொள்கை. அதில் அவர் கொண்டுள்ள உறுதிப் பூண்ட நிலைப்பாடு. அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாகப் போர்க்களத்தில் போராடக்கூடிய மாண்பு. இவை தான் தமிழக அரசியலில் சீமானை தனிப்பெரும் தலைவராக உயர்த்தி கொண்டிருப்பதற்கான காரணம்.
எனக்கும், சீமான் அண்ணனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழைப் பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தைப் பார்க்கிறார் அதுதான் அவருக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம். இருப்பினும், எப்போதும் சீமானுக்கு தொடர்ந்து ஆதராவாக குரல் கொடுப்பதற்கான காரணம் என்ன தெரியுமா. இன்றைக்கு அரசியலில் நேர்மையும், நெஞ்சுறுதியும் குறைந்திருக்கிறது. அவை இருக்கக்கூடிய ஒரு மனிதன் தான் சீமான்.
தேசிய கட்சிகள் தேசிய பிரச்சனைகளை முதன்மையாகவும், மாநில நலனை முக்கியமாகவும் வைக்க வேண்டும். மாநில கட்சிகள் மாநில பிரச்சனைகளை முதன்மையாகவும், தேசிய நலனை முக்கியமாகவும் நினைக்க வேண்டும். அப்போதுதான் இந்திய அரசியலானது ஆளுமை மிகுந்த மனிதர்களால் நல்லபடியாக மாறும். இன்று இக்கட்டான சூழலில் அரசியல் உள்ளது. பிராந்திய கட்சிகளும், தேசிய கட்சிகளும் உச்சக்கட்டத்துக்குச் செல்லும்போது மக்கள் இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் என்றார்.
-
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications