எம்எல்ஏ ஒதுக்கீட்டு நிதியை சரியாக பயன்படுத்தாவிட்டால் கோர்ட்டுக்குப் போவேன்: முக ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்எல்ஏ ஒதுக்கீட்டு நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும் என திமுக பொருளாளரும், கொளத்தூர் எம்ஏல்ஏ-வுமான முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. பொருளாளரும். கொளத்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் இன்று அவரது தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

There is no law & order in TN says MK Stalin

அப்போது, ஜி.கே.எம்.காலனி, முத்து மாரியம்மன் கோவில் குளத்தை உடனே சீரமைக்க வேண்டும். வில்லிவாக்கம் ரயில்பாதையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி சாலைகளை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து திருவள்ளூவர் நகர், குமரன் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கழிவு நீருக்கு தனியாக குழாய் வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் வில்லிவாக்கம்-கொளத்தூர் ரயில்வே கிராஸிங்கில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து ஏற்கனவே பலமுறை சட்டசபை கூட்டத் தொடரில் கேள்வி கேட்டிருக்கிறேன்.

ஆனால் இது தொடர்பாக மலுப்பலான பதில் தான் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் இருந்து வந்துள்ளது. எனவே நீதிமன்றத்தின் உதவியை நாட யோசித்து வருகிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சட்டம்-ஒழுங்கு என்பது இல்லை என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+