ஃபோனில் டெரர்.. நேரில் "அசால்ட் ஆறுமுகம்"... போலீஸுக்கு மிரட்டல் விடுத்தவர் இவரா? நம்ப முடியலையே
Recommended Video

சென்னை: போனில் டெரராக மிரட்டிய புல்லட் நாகராஜனின் குரலுக்கும் உடல் அமைப்புக்கும் துளிக் கூட சம்பந்தம் இல்லாதவராக இருக்கிறார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிபறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர் மீது 1996-ஆம் ஆண்டு முதல் 71 வழக்குகள் இருந்தன. அவை அனைத்துக்கும் இவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டு விட்டது.
இவர் கடந்த சில நாட்களாக போலீஸ் பெண் அதிகாரிகளையும் ஆட்சியர், தேனி மாவட்ட எஸ்பியையும் மிரட்டல் விடுத்துள்ளார்.
போலீஸ் அதிகாரிகளையே புல்லட் நாகராஜன் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லாரி ஏறும்
புல்லட் நாகராஜன் பெண் அதிகாரிகளை மிரட்டும் போது அவரது பேச்சில் எத்தனை வன்மம் தெரிந்தது என்பதை அந்த வீடியோக்களை கேட்டவர்கள் உணர்ந்திருப்பர். மதுரை சிறை துறை எஸ்பியிடம், "நான் பேசாமல் இருந்தாலும் என் பசங்க (அடியாட்கள்) பேசாம இருக்க மாட்டார்கள். உங்கள் மீது லாரி ஏறும் என்று மிரட்டியுள்ளார். அத்துடன் சில போலீஸ் அதிகாரிகளை குறிப்பிட்டு அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது மறந்துவிட்டதா என்றும் கேட்டுள்ளார்.

ஈ மொய்ச்சி கிடக்காதீங்க
தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு மிரட்டல் விடுத்தபோது " அநியாயமா ஈ மொய்ச்சி அனாதை பிணமா கிடக்காதீங்க. நான் வேட்டையாடும் மிருகமாக மாறிடுவேன் " என்று மிரட்டியுள்ளார். அவரது புகைப்படமும் பார்ப்பதற்கு ஓரளவுக்கு பெரிய வில்லன் போல் இருந்தது.

திருச்சி சிறை
இந்நிலையில் நேற்று தென்கரை பகுதியில் பைக்கில் வலம் வந்த புல்லட் நாகராஜனை பெரியகுளம் போலீஸ் டிஎஸ்பி ஆறுமுகம் விரட்டி சென்று கைது செய்துள்ளார். இதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரா மிரட்டல் விடுத்தார்
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது அவரை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம். பில்லா ரேஞ்சுக்கு மிரட்டல் விடுத்த நாகராஜன் இவர்தானா என்று விழிபிதுங்கி பார்த்தனர். ஏனெனில் அவரது கம்பீர குரலுக்கும் அவரது உடல் அமைப்புக்கும் துளி கூட சம்பந்தமில்லை. போனில் டெரராக மிரட்டிய புல்லட் கடைசியில் அசால்ட் ஆறுமுகம் ரேஞ்சுக்கு இருந்தது அதிர்ச்சி அடைய வைத்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications