For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசு தப்பிக்க பின் லேடனின் படத்தை இழுக்கிறது... விஜயகாந்த் கண்டனம்

மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப் புரட்சியில் ஒசாமா பின்லேடன் படம் வைக்கப்படவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மாணவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது தவறு என்றும் விஜயகாந்த்

Google Oneindia Tamil News

சென்னை: மாணவர்கள் போராட்டத்தில் ஒசாமா பின்லேடனின் படம் இருந்ததுப்போல் வாட்ஸ்ப், ஊடகங்களில் வரவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தப்பிப்பதற்காக இதுபோல் கூறியுள்ளதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ''ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது தவறு. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுத்தது" என்றும் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

There was no Osama binledens photo in the jallikattu protest : Vijayakanth

மாணவர்கள் போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது குறித்த கேள்விக்கு பதலளித்த விஜயகாந்த், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம் வைக்கப்படவில்லை என்றார். பின்லேடன் படம் இருந்ததாக எந்த ஊடகங்களிலும் வாட்ஸ்அப்பிலும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு தப்பிப்பதற்காகவே இதுபோல் கூறியுள்ளாதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். விவசாயிகள் தற்கொலை பற்றிய கேள்விக்கு அறிக்கையை பாருங்கள் என விஜயகாந்த் பதிலளித்தார்.

English summary
DMDM leader Vijayakanth says that there was no Osama binledens photo in the jallikattu protest. Central government is only reason for the lahti charge on the students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X