சென்னையை மிரட்டும் மழை... ஆனால் வழக்கம் போல ரயில் ஓடுகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கனமழை பெய்தாலும் ரயில் சேவைகளில் பாதிப்பு இல்லா வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று முதல் 2 நாள்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிகவும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

There will be no problem in train services

நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கினாலும் அதை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளதால் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Railway administration says that there will be no interruption in train services as they are getting ready to clean out the water logging in tracks by electric motors.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற