திமுகவின் அந்த 3 நாட்கள்.. இதுதான் எதிர்காலத்தை தீர்மானிக்கும்!
திமுகவின் அரசியல் பயணத்தை தீர்மானிக்க போகும் மூன்று முக்கியமான நாட்கள் அடுத்த இரண்டு வாரத்தில் வரிசைகட்டி காத்து இருக்கிறது.
சென்னை: திமுகவின் அரசியல் பயணத்தை தீர்மானிக்க போகும் மூன்று முக்கியமான நாட்கள் அடுத்த இரண்டு வாரத்தில் வரிசைகட்டி காத்து இருக்கிறது.
திமுக பல அதிரடி திருப்பங்களை சந்திக்கும் நிலையில் தற்போது இருக்கிறது. திமுகவை வழிநடத்திய தலைவர்கள் பலர் வயதாகிவிட்டதால் ஓய்வு எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
திமுகவின் தலைவர் கருணாநிதி, வயோதிகம் காரணமாக, சென்ற ஆகஸ்ட் 7ம் தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில்தான் திமுக செயற்தலைவர் ஸ்டாலின் பல முக்கியமான திருப்பங்களை எதிர்நோக்கி உள்ளார்.

திமுகவும் நாட்களும்
திமுகவில் இதற்கு முன்பே சில முக்கியமான திருப்பங்கள் நடந்துள்ளது. அண்ணா முதல்முறை முதல்வரானது, அண்ணாவின் மறைவு, திமுகவின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றுக்கொண்டது, கருணாநிதி முதல்முறை முதல்வரானது, வைகோ பிரிந்தது, கருணாநிதி மறைவு என்று திமுக பல அதிரடி திருப்பங்களை சந்தித்தும் நிலைத்து நிற்கிறது. இந்த நிலையில்தான் திமுகவிற்கு மூன்று முக்கியமான நாட்கள் காத்திருக்கிறது.

ஆகஸ்ட் 28ம் தேதி பொதுக்குழு
திமுக முதல் திருப்பத்தை சந்திக்க இருக்கும் நாள் ஆகஸ்ட் 28ம் தேதி. அன்றுதான் திமுக பொதுக்குழு கூடுகிறது. ஸ்டாலின் தலைமையில் கூடும் இந்த கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் பொருளாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கு துரைமுருகன், கனிமொழி ஆகியோர் வரிசையில் இருப்பதால், இந்த நாள் பெரிய முக்கியத்துவத்தை பெறுகிறது.

ஆகஸ்ட் 31ம் தேதி நினைவேந்தல்
இந்த பொதுக்குழு முடிந்து அடுத்த மூன்று நாட்களில் ஆகஸ்ட் 31ம் தேதி கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வர இருக்கிறார்கள். ஆனால் திமுகவிற்கு நெருக்கமான ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு வரவில்லை. இது இப்போதே புயலை கிளப்பி உள்ளது. அதனால், அன்றைய தினம் என்ன நடக்கும், எதாவது கூட்டணி குறித்து விவாதிக்கப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

செப்டம்பர் 5ம் தேதி அழகிரி அவதாரம்
அதன்பின் திமுகவில் இன்னொரு புயலை கிளப்பும் நாள் தான் செப்டம்பர் 5ம் தேதி. அன்றுதான் அழகிரி புதிய அவதாரம் எடுக்க உள்ளார். அன்று அவர் சென்னையில் பெரிய பேரணியை, கருணாநிதி சமாதி நோக்கி செய்ய உள்ளார். இதற்காக, லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். பேரணிக்கு பின் அவர் என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்!












Click it and Unblock the Notifications