கணவன் கண்முன்னேயே மனைவியின் காதை அறுத்து நகைகள் திருடிய திருடர்கள்!
காரைக்குடி: கணவன் கண் முன்னே இளம்பெண்ணின் சங்கிலியை பறித்ததோடு காதிலிருந்த ஜிமிக்கியை கதறக் கதற பிளேடால் கொள்ளையர்கள் அறுத்துச் சென்றதால் அங்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஆலத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி மாரி. நேற்றுமுன்தினம் மாலை இருவரும் சொந்த வேலையாக புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்துக்கு டூவீலரில் சென்றனர்.
பின்னர் இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பிய போது ஆலத்துப்பட்டி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பின்னால் டூவீலரில் வந்த 2 பேர் மூர்த்தியின் டூவீலரை மறித்து நிறுத்தினர். அவர்களில் ஒருவர் திடீரென மூர்த்தியை கீழே தள்ளினார்.
மற்றொருவர் மூர்த்தியின் மனைவி மாரியின் கழுத்தில் இருந்த சங்கிலியைப் பறித்தார். அதுமட்டுமின்றி மாரி காதில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் ஜிமிக்கிகளை பிளேடால் அறுத்தனர். அவர் கதறித் துடித்தபோதும் கவலைப்படாமல் இரு காதுகளிலும் இருந்த ஜிமிக்கிகளை அறுத்து எடுத்தனர்.
இதனால் அவரது இரு காதுகளிலும் ரத்தம் கொட்டியது. பின்னர் கொள்ளையர்கள் 2 பேரும் டூவீலரில் தப்பிச் சென்றனர்.படுகாயமடைந்த மாரியை மூர்த்தி திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மாரி கொடுத்த புகாரின்பேரில் குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications