தூத்துக்குடி- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மீண்டும் கொள்ளை: தொடரும் அவலம்!
தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே ரயிலில் மீண்டும் நகைக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
தொப்பூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் ரயிலில் 3 பெண்களிடம் 17 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தொப்பூரில் தூத்துக்குடி-மைசூர் ரயிலில் மீண்டும் பெண் பயணியிடம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்த பெண் பயணி பூங்கனியிடம் 7 சவரன் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் ரயிலின் ஜன்னல் வழியாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ரயில் பயணி பூங்கனி கொடுத்த புகாரையடுத்து தருமபுரி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து மேட்டுப் பாளையத்துக்கு சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
மே 3ம் தேதி சனிக்கிழமையன்று அதிகாலை 2.55 மணி யளவில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மாவேலிபாளையம் என்ற இடத்தில் அந்த ரயில் சென்றபோது திடீரென நின்றது. அப்போது எஸ் 4, எஸ் 6, எஸ் 7 பெட்டிகளில் இருந்து 5 பேர் கொண்ட கும்பல் இறங்கி ஓடியுள்ளது.
கத்திமுனையில் கைவரிசை
தகவல் அறிந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் கார்டு ஆகியோர் சம்பந்தப்பட்ட பெட்டிகளுக்கு சென்று விசாரணை நடத்தியபோது, தப்பி ஓடிய கும்பல் ரயிலில் இருந்த சென்னையைச் சேர்ந்த சித்ரா, ஜெயந்தி, பத்மாவதி ஆகிய மூன்று பெண்களையும் கத்திமுனையில் மிரட்டி 10 பவுன் நகையை பறித்துச்சென்றது தெரியவந்தது.
மேலும், கொள்ளையடிக்க வசதியாக ரயிலின் குளிர்சாதன பெட்டிக்கும், பொதுப் பெட்டிக்குமான இணைப்பை மர்ம கும்பல் துண்டித்து ஏர் லாக் செய்துள்ளனர். இதை அறிந்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியபோதுதான் அந்த கும்பல் ரயிலில் இருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.
தொடரும் ரயில் கொள்ளை
ரயிலில் கொள்ளையடித்த கும்பலைப் பிடிக்க ரயில் பயணிகள் பெரிதும் முயற்சித்தனர். ஆனால், இருட்டாகவும் காட்டுப் பகுதியாகவும் இருந்ததால் அந்தக் கும்பலை அவர்களால் பிடிக்க முடியவில்லை.
தற்போது மீண்டும் ரயில் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்ததால் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications