உணவு தராததால் தங்கை அடித்துக் கொலை- தலைமறைவாக இருந்த அண்ணன் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தங்கையை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கோட்டமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பங்காரு. இவரது மகள் லில்லிமேரி (22), மகன் குழந்தையேசு (36). விவசாய கூலி தொழிலாளியான குழந்தையேசு, கடந்த 2011-ம் ஆண்டு தனது தங்கையைக் கொலை செய்தார்.
வேலையிலிருந்து திரும்பிய குழந்தையேசுவுக்கு மேரி சரிவர சாப்பாடு தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் உண்டான வாக்குவாதத்தில், குழந்தையேசு தாக்கியதில் பலத்த காயமடைந்த மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையேசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த குழந்தையேசு ஜாமீன் காலம் முடிந்தும் கோர்ட்டில் ஆஜராகாமல், கடந்த 10 மாதமாக தலை மறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், குழந்தையேசு கோட்டமருதூரில் உள்ள அவரது வீட்டின் அருகில் பதுங்கி இருப்பதாக மணலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையேசுவைக் கைது செய்து திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications