கூட்டணி ஆட்சி, அதில் ஒரு பங்கு.. திமுக, அதிமுக கவனத்தை திருப்ப.. திருமாவின் புதிய ‘வியூகம்’!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணி ஆட்சி தொடர்பான கருத்தரங்கிற்கு ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். இது அவரது தேர்தல் அரசியல் வியூகம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
பிரச்சார மேடைகளில் காது கூசும் அளவிற்கு எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிப்பதும், பின்னர் தேர்தல் சமயங்களில் ‘அது நாற வாய், இது வேற வாய்' ரேஞ்சுக்கு சால்வை போர்த்தி கூட்டணி வைப்பதும் அரசியலில் சகஜமான காட்சிகள்.

இவ்வாறு கூட்டணி வைப்பதற்கு பெரும்பாலும் தலைவர்கள் ஏதேனும் பொதுக்காரணம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் கர்நாடக அணை தொடர்பாக திமுக, பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்களைச் சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அவரைத் தொடர்ந்து, திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது சகோதரர் மகன் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுத்து விஜயகாந்த், ராமதாஸ், அன்புமணி, வைகோ, சுப்பிரமணியன் சாமி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்தார்.
இந்த வரிசையில் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் சேர்ந்துள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்பது தான் திருமாவளவனும் கோரிக்கை. இதனை வலியுறுத்தி இம்மாதம் 9ம் தேதி கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளைத் தவிர மற்றக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு வருகிறது. இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை உள்ளிட்டோரை திருமாவளவன் சந்தித்துள்ளார்.
‘இனிவரும் காலங்களில் கூட்டணி ஆட்சி முறைதான் வரவேண்டும். ஒரு கட்சியில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தால்கூட அவருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும்' என உத்திரபிரதேசத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தில் காய் நகர்த்த முயற்சிக்கிறார் திருமாவளவன்.
இதற்காகத் தான் இந்த சந்திப்புகளும், கருத்தரங்கும் என்கிறது அரசியல் வட்டாரத் தகவல். மேலும், இதன் மூலம் ஆட்சியில் பங்குங்கிறதை அழுத்தமா வலியுறுத்தி திமுக, அதிமுகவின் கவனத்தைத் திருப்ப திருமாவளவன் வகுத்துள்ள ‘அரசியல் வியூகம்' இது என்கிறார்கள் அவர்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications