'கேப்டனை'த் தொடர்ந்து வைகோ, வாசனையும் சந்தித்தார் திருமா!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோரைச் சந்தித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடக்கவுள்ள கருத்தரங்கில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார் அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் ஜுன் 9-ம் தேதி கருத்தரங்கு நடக்க உள்ளது. இந்த கருத்தரங்குக்கு திமுக, அதிமுக, பாமக, பாஜக தவிர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்தை, அவரது கோயம்பேடு அலுவலகத்தில் சந்தித்தார். பின்னர், மாலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுத்தார் திருமாவளவன்.
இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கருத்தரங்கில் பங்கேற்க ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
-
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications