ஜெயலலிதா அறிவிப்புக்கு காங்கிரஸ், கம்யூ, விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினரை கேட்டுக் கொண்டுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது அவர்கள் இருவரும் 50 நிமிடங்கள் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பிய தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை கண்டித்து அதிமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போராட்டத்தின்போது அவர்கள் இளங்கோவனின் உருவபொம்மை, புகைப்படங்களை எரித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா
காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை கண்டித்து கட்சியினர் யாரும் போராட்டங்களை இனியும் தொடர வேண்டாம் என்று ஜெயலலிதா அதிமுகவினரை கேட்டுக் கொண்டுள்ளார்.

திருமா
இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இளங்கோவன் அவ்வாறு கூறியது தவறு என்றாலும், அதிமுகவினர் போராட்டம் நடத்துவதும் சரி அல்ல என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முத்தரசன்
இளங்கோவனை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டாம் என்ற ஜெயலலிதாவின் உத்தரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்றுள்ளார். போராட்டம் வேண்டாம் என்று முன்பே தெரிவித்திருந்தால் அரசியல் நாகரிகம் முன்பே காப்பற்றப்பட்டிருக்குமே என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அதிமுகவினரை போராட்டங்களை கைவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications