விடுதலை சிறுத்தைகளுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும்- திருமாவளவன் 'டிமாண்ட்'
அரியலூர்: லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அதன் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
2009-ம் ஆண்டு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றேன். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன்.

அரியலூர் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் செய்யவேண்டும். 1-வது பிளாட்பாரம் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் மனு கொடுத்தேன். அதன்படி தற்பொழுது அரியலூர் ரயில் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நான் வரும் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த முறை 2 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டோம். அதில் நான் மட்டும் வெற்றி பெற்றேன். ஒரு எம்.பி. மட்டும் இருந்ததால் அதிக பணிகளை நிறைவேற்ற முடியவில்லை.
அதனால் தி.மு.க. கூட்டணியில் வரும் தேர்தலில் எங்களுக்கு கூடுதல் இடங்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!












Click it and Unblock the Notifications