எடப்பாடி பாடி லாங்வேஜை பாருங்க.. அதிமுகவை பாஜக தலைமை தாங்கும் நிலை வந்துருச்சு.. திருமாவளவன் ஆதங்கம்
தஞ்சாவூர்: "எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டு கூட்டணி குறித்து அமித் ஷா பேசுகிறார், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை பாஜக தலைமை தாங்கி வழிநடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது" என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரோடு பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து திருமாவளவன் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமையகம் நுழைவு வாயிலில், தந்தை பெரியார், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சீரமைத்த புதிய வெண்கல திரு உருவச் சிலைகளை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றுகையில், “திமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிற ஒரு அரசியல் இயக்கம். அக்கட்சிக்கு இன்னொரு கட்சி முட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற தேவை இல்லை. அந்தளவுக்கு திமுக பலவீனமாக இல்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் திமுகவை எதிர்த்து பேசுகிறார்கள் என்றால் அதை திமுக எதிர்கொள்ளும். ஆனால் திமுகவும் நாமும் பேசுகிற அரசியல் கோட்பாட்டை எதிர்க்கிறார்கள் என்றால் அதை வேடிக்கை பார்க்க முடியாது.
என்னிடம் கூடுதலாகத் தொகுதி தருகிறோம். ஆட்சியில் பங்கு தருகிறோம். திமுக அணியை விட்டு வெளியே வாருங்கள் என ஆசைகாட்டினார்கள். என்னை அசைத்து பார்த்தார்கள் அசைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஊசலாட்டத்தில் நாங்கள் இல்லை.
நான் மிகவும் வளைந்து கொடுக்கக்கூடியவன் தான். ஆனால் என்னை ஒருபோதும் ஒடித்துவிட முடியாது. முறித்துவிட முடியாது. என்னை ஒரு துருப்புச் சீட்டாக வைத்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உடைத்து விடலாம் எனக் கணக்குப் போட்டார்கள். அசைத்துப் பார்த்தார்கள், அசைக்க முடியவில்லை. திருமாவளவன் More Flexible, But More Strong.
அதிமுக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார் என்றால், அவர் தான் கூட்டணியை அறிவித்து இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு கூட்டணி குறித்து அமித் ஷா பேசுகிறார். தமிழ்நாட்டில் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி பேசினால் சரி, ஆனால் அமித் ஷா பேசுகிறார்.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை பாஜக தலைமை தாங்கி வழிநடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி உடல் மொழியும், அமித் ஷாவின் உடல் மொழியும் எப்படி இருந்தது என்று பாருங்கள். ஒரு பெரிய திராவிட இயக்கமான அதிமுகவை அழித்து விட்டால், அடுத்த பெரிய சக்தியான திமுகவை வீழ்த்தி விட முடியும் என்பது அவர்கள் கணக்கு." எனப் பேசியுள்ளார்.
மேலும், "அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பாஜக பணிய வைத்து இருக்கிறது. கூட்டணி ஆட்சி அமைப்போம் என அமித்ஷா அறிவிக்கிறார். யார் தலைமையில் கூட்டணி என்ற சந்தேகம் எழுகின்றது. கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை. இதில், அதிமுகவின் ரோல் என்ன? அதிமுக தொண்டர்கள் இதை மனப்பூர்வமாக ஏற்கவில்லை என நினைக்கிறேன். இந்த கூட்டணியால் திமுக கூட்டணிக்கு எதிராக எந்த தாக்கமும் ஏற்படாது. பாஜக அல்லாத கூட்டணியை அமைக்க எடப்பாடி முயற்சித்தார். ஆனால், அது முடியவில்லை. அதிமுகவிற்கு ஏதோ நெருக்கடியை பாஜக கொடுத்து இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications