தர்மபுரியில் தலித் இளைஞர்களைக் கைது செய்வதா… திருமா. கண்டனம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியில் தலித் இளைஞர்கள் 5 பேரை திடீரென காவல்துறையினர் நள்ளிரவு வேளையில் கைது செய்துள்ளனர்.
வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை வைத்திருப்பதாக ஐயப்பட்டு அவர்களை விசாரித்திடும் வகையில் பிடித்துச் சென்றதாகக் காவல்துறையின் தரப்பில் சொல்லப்படுகிறது.
எதிர்வரும் ஜூலை 4ஆம் நாள் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் நினைவு நாள் என்பதால், அன்று அவ்வட்டாரத்தைச் சேர்ந்த தலித் மக்களும், தலித் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றுகூடுவார்கள் என்ற எண்ணத்திலும், அவ்வாறு ஒன்றுசேர விடாமல் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்திலும் காவல்துறையினர் இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. சில நாட்களுக்கு முன்பு திடீரென தருமபுரி வட்டாரத்தில் 144 தடை ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்தப் போக்கு தலித் மக்களுக்கு எதிரானதாகும். இதனை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட தலித் இளைஞர்கள் 5 பேரையும் விசாரணை என்ற பெயரால் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக காவல்துறை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications