'வெளிச்சம்' டிவி தொடங்க சசி கணவர் நடராஜனிடம் ரூ225 கோடி வாங்கினேனா? திருமாவளவன் விளக்கம்
வெளிச்சம் டிவி தொடங்க சசிகலா கணவர் நடராஜனிடம் ரூ225 கோடி பணம் வாங்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான வெளிச்சம் தொடங்குவதற்கு சசிகலாவின் கணவர் நடராஜனிடம் ரூ225 கோடி வாங்கியதாக பொய்யான தகவல் பரபரப்படுவதாக அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு சென்ற முதல் அரசியல் கட்சித் தலைவர் திருமாவளவன். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தவரும் திருமாவளவன்.

அதேநேரத்தில் தமிழகத்தில் பாஜக காலூன்ற விடக்கூடாது என்பதற்காக அதிமுகவுக்கு ஆதரவு கருத்துகளை தெரிவிப்பதாகவும் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெளிச்சம் டிவி சேனலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் சசிகலா கணவர் நடராஜன் மூலமாக ரூ225 கோடி பெறப்பட்டு அதில்தான் வெளிச்சம் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதாகவும் தகவல்கள் ரெக்கை கட்டி பறந்தன. ஆனால் இவற்றை திட்டவட்டமாக திருமாவளவன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் அளித்துள்ள விளக்கத்தில், தம்முடைய பொன்விழாவை முன்னிட்டு வெளிச்சம் டிவி தொடங்க கட்சி தொண்டர்களிடம் இருந்து பெற்ற தங்க காசுகள் பெறப்பட்டன என்றும் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை என்பதெல்லாம் அச்சுறுத்த்துவற்காக பரப்பப்படுகின்றன எனவும் கூறியுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications