வைகோ அணிவித்த மோதிரத்தை கழற்றி வைத்த திருமாவளவன்!
சென்னை: வைகோ அணிவித்த மோதிரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அணிந்துகொள்வதை தவிர்த்து வருகிறார்.
மக்கள் நல கூட்டணியிலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 'மோதிரம்' சின்னத்தை, தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இதையடுத்து, நெல்லையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலர் வைகோ, திருமாவளவனுக்கு, 2 சவரன் மதிப்புள்ள மோதிரம் அணிவித்தார்.

தவிர்த்தவர்
தாய், தந்தை மற்றும் நண்பர்கள் கொடுத்த போது கூட மோதிரம் அணிய மாட்டேன் என்று தவிர்த்தவர் திருமாவளவன் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் வைகோ கொடுத்த மோதிரத்தை அணிந்து கொண்டார்.

கழற்றமாட்டேன்
இந்த நிகழ்வுக்கு பிறகு நடந்த, அனைத்து தேர்தல் பொதுக்கூட்டத்திலும், திருமாவளவனுக்கு அணிவித்த மோதிரம் குறித்து, வைகோ, மறக்காமல் பேசி வருகிறார். அந்த மோதிரத்தை கழற்ற மாட்டேன் என்று திருமாவளவன் கூறியுள்ளதாகவும், வைகோ பெருமிதம் தெரிவித்து வந்தார்.

தவிர்ப்பு
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டையில் நடந்த, தேமுதிக-மக்கள்நல கூட்டணி-தமாகா வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன், மோதிரம் எதுவும் அணியவில்லை என்பதை தொண்டர்களால் கவனிக்க முடிந்தது.

ஆசையில்லைங்க
மோதிரம் அணிவதை திருமாவளவன் தவிர்த்து வருவது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், நகைகள் மீது திருமாவளவனுக்கு பற்று கிடையாது. விருப்பம் இல்லாததால், அந்த மோதிரத்தை அணியவில்லை என்றார்.
-
திருவள்ளுவருக்கு காவி சாயமா.. கருப்பு சட்டையுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ அதிரடி கைது -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications