காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்த பிரதமருக்கு திருமாவளவன் நன்றி

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை....
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டுக்குப் போவதில்லை என முடிவெடுத்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்த மாநாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கவேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டின் கோரிக்கை. அதைப் பரிசீலித்து வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழுவை அந்த மாநாட்டுக்கு அனுப்புவதென்ற முடிவைக் கைவிட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களை சேனல் 4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தி வருகிறது. போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பின்னரும் கூட இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை குறையவில்லை என்பதை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகின்றன.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எம்.பியான லீ ரியான்னன் மற்றும் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்.பியான ஜேன் லோகி ஆகியோரும்; பிபிசி செய்தியாளர் ஃப்ரான்சஸ் ஹாரிஸன் அவர்களும் இலங்கையில் போருக்குப் பின்னரும் தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதை ஆதாரங்களோடு வெளிப்படுத்தியுள்ளனர்.
போர்க்குற்றங்கள் இழைத்தவர்களை இலங்கை அரசு தண்டிக்கவில்லையென்றால் சுயேச்சையான சர்வதேச விசாரணையைக் கோருவதுதவிர வேறுவழியில்லை என இங்கிலாந்து பிரதமர் தகேமரூன் அவர்கள் எச்சரித்திருக்கிறார்.
தமிழர் பகுதிகளைப் பார்வையிடப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளவேண்டும். காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்வதற்கு இந்திய அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்க இந்தியா ஆதரவளிக்கக்கூடாது.
2014 மார்ச் மாதத்தில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் மீண்டும் இலங்கை குறித்த விவாதம் நடைபெறவிருக்கிறது. அப்போது சுயேச்சையான சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்கு ஆணையிடப்படலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதற்கு ஒத்துழைப்பு தரும்விதமாக இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் தரவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications