தனிமைச் சிறையில் அடைக்க நான் தீவிரவாதியா? போலீசாரிடம் திருமுருகன் காந்தி சரமாரி கேள்வி
சென்னை: தனிமைச் சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் என்ன தீவிரவாதியா என்று, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி குமுறல் வெளிப்படுத்தினார்.
திருமுருகன் காந்தியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்று காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது வேனில் இருந்து இறங்கும்போது போலீசாரிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் திருமுருகன் காந்தி.

வேலூரில் வாகனத்தில் ஏற்றிய பிறகு சிறுநீர் கழிக்க கூட நிறுத்தவில்லை. நான் என்ன தீவிரவாதியா? எஸ்.வி.சேகரை பிடித்தீர்களா? எஸ்.வி.சேகரைக் கைது செய்ய முடியாத காவல்துறை இங்கே வந்து நிற்கிறீர்களா? உங்கள் நேர்மையைதான் உலகமே சிரிக்கிறதே?
பாஜக மோடி அரசின் காட்டாட்சி தர்பார்!
— May17 Movement (@May17Movement) August 24, 2018
திருமுருகன் காந்தியை பிணையில் வெளிவரமுடியாத தீவிரவாதிகள் மீது போடப்படும் UAPA வழக்கில் கைது செய்திருக்கிறார்கள்.
பொடா தடா போன்ற மிகக் கொடூரமான, ஜனநாயக விரோத கருப்பு சட்டமான UAPAவினை மனித உரிமை செயல்பாட்டாளரான திருமுருகன் காந்தி மீது... pic.twitter.com/uQkPoTVR8L
ஊபா சட்டத்தை எங்கள் மீது போட்டுள்ளீர்கள். தீவிரவாதிகள் மீது போடும் சட்டத்தில் கைது செய்ய நான் என்ன தீவிரவாதியா? மருத்துவமனை பரிசோதனைக்கு உத்தரவிட்டும் போலீஸார் செய்யவில்லை.
என்னை தனிமைச் சிறையில் வைத்துள்ளார்கள். ஊபா சட்டத்தை ஏன் போட்டீர்கள். மோடி அரசை விமர்சித்தால் தீவி்ரவாதிகள் போல வழக்குப் போடுவதா. ஆயிரம் முறை மோடி அரசை விமர்சிப்பேன். எனது குடும்பத்தை கூட சந்திக்கவிடாமல் ஏன் செய்கிறீர்கள்? இதற்கெல்லாம் பயப்படபோவதில்லை. இவ்வாறு ஆவேசமாக பேசினார் திருமுருகன் காந்தி.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications