வளர்மதிக்கு நிவாரணம்.. திருமுருகன் காந்திக்கு என்று கிடைக்கும் குண்டாஸிலிருந்து விடுதலை?
வளர்மதியை போல் திருமுருகன் காந்தியும் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: வளர்மதியை போல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியும் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
அமைதியை சீர்குலைப்போர் மீது போடப்படும் குண்டர் சட்டத்தை முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீதும், ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய சேலம் மாணவி வளர்மதி மீதும் போடப்பட்டது.
இதனால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சட்டத்தை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்தும் அரசு காதில் போட்டு கொள்ளவில்லை.

நினைவேந்தல் நிகழ்ச்சி
முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஆண்டுதோறும் மெரினாவில் மே 17 இயக்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி தடையை மீறி நிகழ்ச்சியை நடத்தினர்.

கைது
இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அதேபோல் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரம் வழங்கியதாக சேலம் மாணவி வளர்மதியும் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

அரசு அலட்சியம்
இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள், அரசியல் அமைப்புகள் கேள்வி எழுப்பியும் மாணவிக்கு எதிராகவே தமிழக அரசு செயல்பட்டது. இந்நிலையில் மாணவியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.

அரசுக்கு சாட்டையடி
பல்வேறு தரப்பினர் மாணவி மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் எந்த நடவடிக்கையையும் முதல்வர் எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசின் ஒடுக்குமுறைக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது.
Recommended Video


திருமுருகன் காந்திக்கு எப்போது?
இதேபோல் திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்க்கின்றனர். தஇவர் விஷயத்திலும் மௌனத்தையே பதிலாக கொண்ட தமிழக அரசுக்கு மற்றொரு சாட்டையடியை உயர் நீதிமன்றம் வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications