இரட்டை இலை முடக்கப்பட்டது பாஜகவின் சதி: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
இரட்டை இலை முடக்கப்பட்டது பின்னால் பாஜகவின் சதி இருப்பதாக திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: இரட்டை இலை முடக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் சதி உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெள்ளிக்கிழமை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கிறது. மத்திய அரசின் பாராமுகத்தை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக வறட்சி நிவாரண நிதி குறைவை சுட்டிக்காட்டாமல் தமிழக மக்களுக்கு எதிராக குரல் கொடுப்பது வேதனை அளிக்கிறது. இந்த மனோ பாவத்தை கண்டிக்கிறோம். இதனால் தான் தமிழகத்தில் பா.ஜ.க., வளர்ச்சி அடையாமல் உள்ளது என்று கூறினார்.
மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். இரட்டை இலை யாருக்கு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, நாங்கள் இரட்டை இலையை எதிர்த்துதான் போட்டியிடுகிறோம். இரட்டை இலை முடக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் சதி உள்ளதாகவும் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications