திருநாவுக்கரசருக்கு வந்த திடீர் ஆசை!
ஜெ. ஆவியுடன் பேச விருப்பம் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆவியோடு எனக்கு பேச தெரியவில்லை. அப்படி பேச தெரிந்தால் ஜெயலலிதா ஆவியோடு பேச ஆசையாக இருக்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஷ்னிக், மாநில தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மோடியிடம் பதிலே கிடையாது
அப்போது பேசிய திருநாவுக்கரசர், ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் 41,000 கோடி மத்திய அரசு ஊழல் புரிந்துள்ளது என்று குற்றம் சாட்டினார். பிறகு மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான் என்றும் ராகுல் காந்தி கேட்ட எந்தக் கேள்விக்கும் இதுவரை மோடி பதில் அளித்ததே கிடையாது என்றும் கூறினார்.

ஊழல் ஆட்சி
மத்திய அரசை கடுமையாக தாக்கிய பேசிய திருநாவுக்கரசர் மாநில அரசையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடந்து வருகிறது என்று சாடினார். மத்தியில் காவி ஆட்சி என்றால் மாநிலத்தில் ஆவி ஆட்சி நடப்பதாகவும் கூறினார்.

ஜெயலலதா ஆவி
தொடர்ந்து பேசிய திருநாவுக்கரசர், ஆவியிடம் எப்படி பேசுவது என தெரியவில்லை. ஆவியிடம் பேச மட்டும் எனக்கு தெரிந்தால் தான் ஜெயலலிதாவிடம்தான் முதலில் பேச வேண்டும்.

நிறைய பேசணும்
அவரிடம் பல விஷயங்கள் பேச இருக்கிறது என்றார். கடைசியாக பேசி முடிக்கும்போது, புழலில் ஏற்படுத்தப்பட்டுள்ள சொகுசு வசதிகள் நாளை சிறைக்குள் போக இருப்பவர்களுக்காகத்தான் என்று ஒரு பஞ்ச் வைத்து முடித்தார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications