கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த இளங்கோவன் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் 4 மாத காலம் இப்பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில் இன்று திருநாவுக்கரசரை புதிய தலைவராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை அண்ணா நகரில் உள்ள தமது இல்லத்தில் திருநாவுக்கரசருக்கு காங்கிரசார் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:
கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழகத்திலும் இளைஞர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். இங்கு வாழும் கன்னட மக்களைத் தாக்க கூடாது.
சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காங்கிரஸில் கோஷ்டி பூசல் எப்போதும் இருந்தது இல்லை. இனியும் இருக்காது.
டெல்லி சென்று மேலிடத் தலைவர்களை சந்தித்துவிட்டு பின்னர் தமிழக தலைவர்கள், தொண்டர்களையும் சந்திப்பேன்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications