ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் - திருநாவுக்கரசர் வேண்டுகோள்
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் விலகியதைத் தொடர்ந்து, சமீபத்தில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் திருநாவுக்கரசர். அதனைத் தொடர்ந்து முக்கிய கட்சித் தலைவர்களை நேரில் அவர் சந்தித்து வருகிறார்.

அந்தவகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை நேற்று திருநாவுக்கரசர் நேரில் சந்தித்தார். சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, பொதுச் செயலாளர்கள் கே.சீரஞ்சீவி, சி.டி.மெய்யப்பன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

சந்திப்புக்கு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திருநாவுக்கரசர் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலத்தில் அரசியல் செய்வது தவறு. ஜெயலலிதா அப்பா, அம்மா, கணவர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் தனியாக இருந்து வருகிறார். தோழிகள் சிலர் இருக்கிறார்கள். இருந்தாலும், அவரது உடல்நிலைக்கு தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு.

தேவைப்பட்டால் வெளிநாட்டு மருத்துவர்களை அழைத்து அவரை பரிசோதிக்க வேண்டும். அவரது உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்ப கூடாது. தமாகா தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது அவர்களது முடிவு. நாங்கள் திமுகவுடன் பேசி வருகிறோம். அந்தந்த மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள காங்கிரஸ் குழுக்கள் எந்தந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக குழுக்களுடன் பேசி வருகின்றனர்.
அக்டோபர் 3ம் தேதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது. வேட்பாளர் பட்டியலை என்ன இரவோடு இரவாகவா தயார் செய்தார்கள். முன்கூட்டியே தேர்தல் தேதி அறிவிப்பு தெரிந்து தயார் செய்யப்பட்ட பட்டியலை தான் வெளியிட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தொடக்கத்திலேயே சரியில்லை. எனவே, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என யார் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டால் என்ன? சட்டப்படி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications