ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம்- திருநாவுக்கரசர்
Recommended Video

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்து விலகி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.

அவர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதை விட மீண்டும் வாஜ்பாய் இருந்த பாஜகவுக்கு சென்றால் அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இப்போதும் ஒன்றும் கெட்டு போய்விடவில்லை, அவர் மீண்டும் பாஜகவில் இணைந்தால் அவருக்கும் தமிழக காங்கிரஸுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு என்றார்.
இந்த கருத்து கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருநாவுக்கரசர் கூறுகையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்.
முதலில் அவரது எதிர்காலத்தை பற்றி அவர் கவலை கொள்ளட்டும் என்று பதில் அளித்துள்ளார். ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் கட்சி கோஷ்டி அரசியலுக்கு பெயர் போன கட்சி என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில் இதுபோல் மூத்த தலைவர்கள் மோதி கொள்வது பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications