மாணவர்களின் பாசப்போராட்டம் வெற்றி.. ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்தது கல்வித்துறை!
மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஒரே நாளில் பிரபலமான ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஒரே நாளில் பிரபலமான ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் பகவான். இவர் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
பகவான் பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் 280 பேர், 19ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதறிய மாணவர்கள்
கடந்த 20ம் தேதி பள்ளி விடுப்புச் சான்று பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சுற்றிக்கொண்டு கதறி அழுதனர்.
|
வைரலான வீடியோ
இதனால் நெகிழ்ந்து போன ஆசிரியரும் பாசம் காட்டும் மாணவர்களை விட்டுச் செல்ல மனமின்றி கண்ணீர் விட்டு அழுதார். மாணவர்களின் இந்த பாசப்போராட்ட வீடியோ வைரலானது.

பிரபலங்கள் வாழ்த்து
பல்வேறு ஊடகங்களிலும் ஆசிரியரை பாராட்டியும் மாணவர்கள், ஆசிரியர் உறவு குறித்தும் செய்திகள் வெளியிடப்பட்டன.இதைத்தொடர்ந்து ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியிருந்தனர்.

தற்காலிக நிறுத்தம்
மாணவர்களின் பாசப்போராட்ட வீடியோவால், அரசுப்பள்ளி ஆசிரியரும் மாணவர்களும் ஒரே நாளில் பிரபலமாயினர். இதனால் ஆசிரியர் பகவான் பணிநிரவல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பணியிட மாறுதல் ரத்து
இந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் பகவான் வெளியகரம் பள்ளி பணியில் தொடர அனுமதி வழங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்து பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மகிழ்ச்சி
இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஆசிரியரின் பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications